#தஞ்சை_மணலூர்_தியாக_வரலாறு! #செப்_2தோழர்கள்_சந்திரகுமார்_சந்திரசேகர்_நினைவுகள்_அழியாது!****************************** எழுதப்படாத வரலாற்றின் பக்கங்கள் :-
#தஞ்சை_மணலூர்_தியாக_வரலாறு!
#செப்_2தோழர்கள்_சந்திரகுமார்_சந்திரசேகர்_நினைவுகள்_அழியாது!******************************
எழுதப்படாத வரலாற்றின் பக்கங்கள் :-
--------------------------------------------
1984 செப்டம்பர் 2 அதிகாலையில், காவிரி பாயும் தஞ்சை மாவட்ட ஆடுதுறை அருகிலுள்ள மணலூரில், கிராமப்புற ஏழைகளின் புரட்சிகர வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், CPIML கட்சி ஊழியர்கள் தோழர்கள். சந்திரகுமார், சந்திரசேகர் நிலப்பிரபுத்துவ சக்திகளால் கொல்லப்பட்டனர்.

கீழத்தஞ்சை (தற்போதைய நாகை மாவட்டம்) வர்க்கப்போராட்டத்தில், 1968 டிசம்பர் 25ல், 44 உயிர்களை எரித்துக் கொன்ற நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடுவை நீதிமன்றம் விடுவித்து விட்டபோது, 1980 டிசம்பரில் மக்கள் மன்றத்தில் கணக்கு தீர்த்த CPIML கட்சியானது, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை, ஆடுதுறை-கும்பகோணம், மன்னார்குடி வட்டாரங்களில் புரட்சிகர கிராமப்புற இயக்கங்களை/மக்கள் திரள் அமைப்புகளை கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவான அர்ப்பணிப்புமிக்க இளம் கம்யூனிஸ்ட் போராளிகள் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தோம்.
80 களின் துவக்க ஆண்டுகள், சிற்சில வெற்றிகள் மற்றும் சட்ட பாதுகாப்புகளுக்குப் பிறகு ...கீழத் தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்கள் இயக்கமானது தேக்கத்தில் இருந்தது. கோவில்-மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகையாளர் உரிமைகள், மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்களின் நிலத்தை "உச்சவரம்பிற்கு அதிகமான /சட்ட விரோதமான சொத்தை" கைப்பற்றும் போராட்டம் ஆகியவற்றை கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கங்கள் நடத்தி கொண்டிருந்தன.
கீழத் தஞ்சையில், நீண்ட நெடிய போராட்ட இயக்கத்தின் காரணமாக, அறுவடை தவிர்த்த பிற விவசாய வேலைகளுக்கான சட்டக் கூலி ரூ.10 அமலாக்கப்பட்டு வந்தது. ஆனால், மேலத் தஞ்சையில் ரூ.5 மட்டுமே வழங்கப்பட்டது. CPIML அமைப்பின் மக்கள் திரள் அமைப்புகள், ஏழை விவசாயிகள் சங்கம் கூலிப்பிரச்சினையை எடுத்தது. பல்வேறு கிராமங்களில் கூலிப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்களை கட்டமைத்தது. அறுவடைக்கான கூலி 3 மரக்கால் என்பதிலிருந்து 5 மரக்காலாக உயர்ந்தது. ஆனால்..விவசாய வேலைகளுக்கான தினக்கூலி ரூ.5 என்பதாகவே நீடித்தது.
மணலூர் வட்டாரத்தில் வர்க்கப்போராட்டம் :-
------------------------------------------------
" மேலத் தஞ்சையில் விவசாய வேலைகளுக்கான சட்டக்கூலி ரூ.10 யை அமல்படுத்து !" என்ற முழக்கத்தின் அடிப்படையில், ஆடுதுறை வட்டாரத்தில் இருந்த மணலூர், கஞ்சனூர்,சூரியனார்கோவில்,கோட்டூர், துகிலி, திருக்கோடி கோவில்,பருத்தி குடி, திருமங்கல குடி ஆகிய கிராமங்களில் போராட்டம் பரவியது. வெகுமக்கள் அமைப்புகள் மற்றும் தமிழக மக்கள் முன்னணி பிறகு IPF ஆகிய அமைப்பின் மூலமாக இயக்கம் கட்டமைக்கப்பட்டது. கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு அழித்தொழிக்கப்பட்ட பிறகு, CPIML கட்சி செயல்பாடுகள் மீது புதியவகை நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், நெல் உற்பத்தியாளர்கள் பீதியில் இருந்தனர். பணப்பயிர் போல் அல்லாமல், நெல் உற்பத்தியானது பிரதானமாக ஆற்றுநீர் பாசனத்தையும், பெரும் மனித உழைப்பையும் கொண்ட விவசாய நடவடிக்கையாகும். எனவே கூலிப்பிரச்சினை முக்கிய இடத்தை பிடித்திருந்தது. தலைமறைவு கட்சி ஊழியர்களை ஒழித்துக் கட்ட ஆங்காங்கே அடியாள் படைகளையும் நிலப்பிரபுக்கள் உருவாக்கி வைத்திருந்தனர். பிற்பட்ட சாதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை சாதியரீதியாக தங்கள் பக்கம் அணிதிரட்டிக் கொண்டனர்.

#சந்திரகுமார்_சந்திரசேகர்_தியாகம் "
------------------------------------------------
உள்ளூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய தோழர்.சந்திர குமார் மணலூர் வர்க்கப்போராட்டத்தின் கருவாக திகழ்ந்தார். மயிலாடுதுறையில் இருந்து வந்த ஆனதாண்டவபுரம் AGR என்கிற ரெங்கநாதன், மன்னார்குடி அருகில் உள்ள சோழபாண்டியை சார்ந்த சந்திரசேகர் போன்றோர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினர். மணலூர் வர்க்கப்போராட்டத்தின் களமானது. நிலப்பிரபுத்துவ ராமைய்யன் தலைமையிலான சக்திகள் தொடர்ந்த தாக்குதல்களை நடத்தி வந்தனர். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் முதல் கட்சி ஊழியர்கள் வரை தாக்கப்பட்டனர்.
வெட்டுக் கூத்துக்கள், மோதல்கள் வெடித்தன. பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. மொத்த எம்.எல் இயக்கத்தையும் சிதறடிக்க மணலூர் இயக்கத்தை ஒழித்துக் கட்ட பல்வேறு சக்திகளும் கரம்கோர்த்தன.

மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து சென்ற நிலையில், 1984 செப்டம்பர் 1ந் தேதியன்று, தோழர்களும், மக்களும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் & காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் SP யை சந்தித்தனர். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக SP உத்திரவாதம் வழங்கினார்; திருப்பனந்தாள் காவல்நிலையத்திற்கு அறிவித்துவிட்டு மணலூருக்கு செல்லும்படி கோரினார். நயவஞ்சகமாக காவல்துறை ஏமாற்றியது; நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் தகவல் வழங்கியது. கோ.சீ.மணியும் கூட அவர்களுடன் கரம்கோர்த்தார்.
செப்டம்பர் 2 அதிகாலை. சர்ச் மணியடித்து நிலப்பிரபுத்துவ சாதியாதிக்க சக்திகள் தங்களுடைய ஆயுதபாணியான பட்டாளத்தை திரட்டிக் கொண்டனர். ஆயுதங்கள் இன்றி திரும்பிய மக்கள், தலைவர்கள் 67 பேர்களையும் ஆபத்தான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்.
முன்வரிசையில் அணிவகுத்த தலைவர்கள் சந்திர குமார், சந்திர சேகர் கொல்லப்பட்டார்கள். AGR, கண்ணையன், லூர்துசாமி, தங்கசாமி, பாலு,நாகராஜ், இரண்டு குருசாமிகள், நாகைய்யா, சின்னதுரை மற்றும் சில தோழர்கள் படுகாயமுற்றனர். ராசேந்திரன் கம்பத்தில் கட்டிப் போடப்பட்டு தாக்கப்பட்டார். மணலூர் இரத்த வெள்ளத்தில் மூழ்கியது. தலித்துகள், வன்னியர், கள்ளர் என அனைவரின் ரத்தமும் புரட்சிகர கம்யூனிஸ்ட்களின் தியாகத்தின் சாட்சியமாக கலந்தோடியது.
தாமதமாக வந்து, காவல்துறையும், அரசு அதிகாரிகளும் சேதங்களை மதிப்பீடு செய்தனர். உயிருக்கு அஞ்சிய நூற்றுக்கணக்கான தலித் ஏழைகள் மணலூரை விட்டு வெளியேறினர்; அஞ்சாதவர்கள் சில இளைஞர்கள் மட்டுமே! கட்சி தரப்பில் இருந்த தவறுகள் பற்றிய சுயபரிசீலனை செய்யப்பட்டது. அங்கிருந்த கட்சி ஊழியர்கள் மாற்றப்பட்டனர். புதிய ஊழியர்கள் பொறுப்பு ஏற்றனர்.
மணலூரில் மீள்குடியேற்றம்!
-------------------------------------------
1984-85 செப்டம்பர் வரையிலான ஓராண்டு வலி நிறைந்த பயணம். பல்வேறு கிராமங்களுக்கு சிதறிப்போன மக்களை சந்தித்து, நம்பிக்கை ஏற்படுத்தி மீள்குடியேற்றம் நிகழ்த்திட கட்சி தோழர்கள் சங்கர் & சகாதேவன் மேற்கொண்ட பலநூறு கி.மீ பயணம் மறக்க முடியாததாகும். மறைந்த தோழர். நாராயணன் (கக்கரைக் கோட்டை) கடும் உழைப்பு மறைக்க முடியாததாகும். பட்டியல் இட்டால் நீளும் பல தோழர்களின் பணிகளை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

#மணலூர்_மக்கள்_இளைஞர்கள்_வீரம்செறிந்தவர்கள். திரும்பி வந்தனர்.
1986, செப்.2 தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. மணலூரில் இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களின் மீள் குடியேற்றம் நிகழ்ந்தது.
கட்சி வரைபடத்தில் மணலூர் நீடிக்கிறது!
-------------------------------------------------
அதற்குப் பிறகு, மணலூரை மய்யப்படுத்தி பல்வேறு போராட்டங்கள், இயக்கங்கள் தொடர்கின்றன. மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தோழர்.TKS ஜனார்த்தனன் இறக்கும்வரை மணலூரில் தங்கிப் பணியாற்றினார். புதிய தலைமுறை இளம் தோழர்களும் உருவாகியுள்ளனர்.

சமூகப்பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மணலூரிலும் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. நமது புரட்சிகர கிராமப்புற இயக்கத்தில் மணலூர் வீரம்செறிந்த மரபாகும்.
#ஏராளமாக_எழுத_வேண்டியுள்ளது. இது நினைவு குறிப்பு தான்!
#தியாகிகள்_சந்திரகுமார்_சந்திரசேகர் இலட்சியத்தை உயர்த்தி பிடிப்போம் !
#தியாகிகள்_ஏந்திய_புரட்சி_தீபத்தை_அணையாமல்_பாதுகாப்போம்!

உங்களுடன் பயணம் செய்த அர்ப்பணிப்பு மிக்க நாட்களை நெஞ்சில் ஏந்துகிறேன்!
உங்களையும், உயர்த்திப் பிடித்த இலட்சியங்களையும் என்றும் மறவேன்!
#செவ்வணக்கம் !
#RedSalute !
#LalSalam!

-சந்திர மோகன்
Red salute to comrade!
ReplyDelete